பிரபல இந்தி நடிகரும் பா.ஜ.க எம்.பியுமான வினோத் கண்ணா இன்று காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு புற்றுநோய் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதை அவர் மகன் ராகுல் கண்ணா மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வினோத் கண்ணா மரணமடைந்தார்.
இவர், தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம், மும்பைக்கு இடம்பெயர்ந்தது. 1968ல் வெளியான ’மான் கி மீத்’ என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமான வினோத் கண்ணா, இதில் வில்லனாக நடித்தார். இந்தப் படம் தமிழில் வெளியான ’குமரிப்பெண்’ படத்தின் ரீமேக். தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துவந்த இவர், அடுத்து ’ஹம் தும் அவுர் வோ’ படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து, மேரே அப்னே, மேரா கான் மேரா தேஷ், கட்டார், ஜெயில் யாத்ரா உட்பட சுமார் 141 படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த வினோத் கண்ணா, கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல் கண்ணா, அக்ஷய் கண்ணா என்ற இரண்டு மகன்கள். இருவரும் நடிகர்கள். கருத்து வேறுபாடு காரணமாக கீதாஞ்சலியை பிரிந்த இவர், பின்னர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாக்ஷி என்ற மகனும் ஸ்ரத்தா என்ற மகளும் உள்ளனர்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்