[X] Close

“234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன்” - சீமான் 

seeman-said-always-nominate-lonely-not-with-alliance

இனி அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Advertisement

செங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றிச்செல்வியை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அவர்களின் குடும்பம் தான் வெளிச்சத்திற்கு வரும் என்றும், இரட்டை இலை மொட்டை இலையாகி விட்டது என்றும் சாடினார். 


Advertisement

அண்டா, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுக்கும் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக இல்லை எனத் தெரிவித்தார். தரமான கல்வியை இலவசமாக நாம் தமிழர் கட்சியால்தான் தர முடியும் எனவும், கல்வியை வியாபாரமாக்கி, மருத்துவத்தை வியாபாரமாக்கியுள்ள கட்சிகளால் இலவசமாக தர முடியாது எனவும் குறிப்பிட்டார். 

எந்தக் காலத்திலும் திமுக, அதிமுக, தேசிய கட்சிகளோடு கூட்டு இல்லை, 234 தொகுதிகளிலும் மீண்டும் தனித்தே நிற்பேன் எனவும் சீமான் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close