Published : 15,Apr 2019 01:54 AM
நாட்டை துண்டாக்க அனுமதிக்கமாட்டேன் - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டை ஒருபோதும் துண்டாக்க அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கத்வாவில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஆட்சியில் இருந்த இரு குடும்பங்களை நீக்கினால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியடையும் என்றார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு என தனி பிரதமர் வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ள
நிலையில், நாட்டை துண்டாக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி கூறினார்.
குடும்ப ஆட்சி தான் நாட்டின் பிரதான எதிரி என அம்பேத்கர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், குடும்ப ஆட்சி நடத்துவோருக்கு எதிராக
வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார்.
முன்னதாக உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 40 தொகுதிகளில் கூட போட்டியிடாதவர்கள் பிரதமர் பதவிக்காக கனவு காண்பதாக மாயவதியையும், அகிலேஷ் யாதவையும் மறைமுகமாக சாடினார்.