கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியைக் காணவில்லை என்று கடந்த 25-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்தத் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க, டி.எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு சிறுமி மீட்கப்பட்ட இடத்தில் உள்ள செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தில் துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நோட்டீஸ் அச்சடித்துள்ள காவல்துறை, அதை அந்தப் பகுதியில் ஒட்டி வருகின்றனர். மக்களிடமும் விநியோகித்து வருகின்றனர். தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கூடுதலாக சிறுமி காணாமல் போனதற்கு முன்பாகவே பல நாட்களாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?