நான் பட்லரை கிரிக்கெட் விதிகளின்படியே அவுட் செய்தேன், அதில் தவறேதுமில்லையே என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் என ரன் மழையை பொழிந்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார், ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் 13 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் "மன்கட்" முறையில் ரன் அவுட் செய்தார். அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. இப்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவு்டடால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் செய்தது தவறு, அவர் கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
இது குறித்து அஸ்வினும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதலளித்துள்ளார் " மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடக்க கூடியவை. நானும் முழுதாக ஓடி வந்து கிரீஸை தொட்டு பந்து வீச வந்தேன், அப்போது பட்லரும் கிரீஸை விட்டு நர்ந்துவிட்டார், அவர் என்னை பார்க்கவுமில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தேன். நான் செய்த இந்த அவுட்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதுபோன்ற அவுட்டுகள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும்" என்றார்.
மேலும் தொடர்ந்த அஸ்வின் "பட்லரை திட்டமிட்டு இம்முறையில் அவுட்டாக்கவில்லை. விளையாட்டின்போது இயல்பாக அமைந்தது. மேலும், நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட்டாக்கவில்லை. இதில் எங்கிருந்து விளையாட்டின் மதிப்பும் ஸ்பிரிட்டும் பாதித்தது என எனக்கு தெரியவில்லை. கிரிக்கெட்டை அதன் விதிபடி விளையாடினால் தவறென்றால், அப்போது அந்த விதியை மாற்ற வேண்டும் இல்லை சரி செய்ய வேண்டும்" என்றார் அவர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!