[X] Close

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: முதல் போட்டியில் வெல்வது தோனியா, கோலியா?

IPL-2019--CSK-vs-RCB--Clash-of-the-Titans

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் விராத் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் சென்னையில் இன்று மோதுகின்றன.


Advertisement

12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதி போட்டிக்குச் செல்லும்.


Advertisement

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணியும் மோதுகின்றன. சிஎஸ்கே அணியில். கடந்த தொடரில் அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், கேப்டன் தோனி,  ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். இந்த முறையும் இவர்களைத்தான் சிஎஸ்கே நம்பியிருக்கிறது. அதோடு கேதர் ஜாதவ் அணிக்கு திரும்பியிருப்பதும் பலம்.

பந்துவீச்சில், தென்னாப்பிரிக்காவின் நிகிடி காயம் காரணமாக விலகிவிட்டார். அதனால் இங்கிலாந்தின் டேவிட் வில்லே, மார்க் வுட், ஷர்துல் தாகூர், சாஹர், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோர் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். சுழல் பந்துவீச்சில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், நியூசிலாந்தின் சன்ட்னர் என பலம் வாய்ந்த டீம் இருக்கிறது.


Advertisement

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவான அணிதான். ஆனால், சென்னைக்கு எதிராக அந்த அணியின் ரெக்கார்ட் மோசமாகவே இருக்கிறது. இதுவரை 22 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 7 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இருந்தாலும் டி20 போட்டியில் எதுவும் நடக்கலாம். அந்த அணியின் விராத் கோலி செம பார்மில் இருக்கிறார். டிவில்லியர்ஸ், ஹெட்மையர் உள்பட அதிரடியான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்னை எட்ட இன்னும் 15 ரன் தேவைப்படுகிறது. பெங்களூரு கேப்டன் விராத் கோலி க்கு 52 ரன் தேவைப்படுகிறது. இந்த தொடரில் சில போட்டிகளிலேயே இதை அவர்கள் எட்டி சாதனைப் படைப்பார்கள்.

வழக்கமாக, ஐ.பி.எல். தொடக்க விழாவில், நடிகர், நடிகைகளின் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த முறை புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் ஐ.பி.எல். தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த செல வுத் தொகை ரூ.20 கோடியை, அந்த வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று டாஸ் போடும் முன் அந்த தொகை, ராணுவ அதிகாரிகளிடம் அளிக்கப்படும்.

போட்டி, இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


Advertisement

Advertisement
[X] Close