Published : 05,Mar 2019 02:03 AM

தேமுதிக இன்று அவசர ஆலோசனை.. கூட்டணி முடிவை அறிவிக்கிறதா..?

DMDK-Meeting-today

விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ள நிலையில், அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு அதிமுக தலைமை தீவிரம் காட்டுகிறது.

முன்னதாக விஜயகாந்தை நேற்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி பற்றிய அனைத்து கட்சிகளின் முடிவுகளும் நாளைக்குள் அறிவிக்கப்படும். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் பங்கேற்று நாட்டின் பிரச்னைகள் குறித்தும், யார் தலைமை ஏற்றால் நாட்டிற்கு நல்லது என்பது குறித்தும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள் என்று தெரிவித்தார். அத்துடன் பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். எனவே அதிமுக- தேமுதிக இடையிலான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்