சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘எக்ஸ்பெரியா எல்3’ இன்று வெளியாகியுள்ளது.
சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ‘எக்ஸ்பெரியா எல்3’ மாடலை இன்று பார்சிலோனாவில் நடைபெற்ற செல்போன் கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன்விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 5.7 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே மற்றும் ஃபிங்கர்பிரிண்ட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த டிஸ்ப்ளே செல்போன் கீழே விழுந்தால் எளிதாக உடையாமல் இருக்கும் கொரில்லா கண்ணாடியினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோ-கோர் பிராசஸெர்சரில் செயல்படும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது. அத்துடன் கூடுதலாக மைக்ரோ சிப் பொருத்தி 512 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும்.
இந்த போனின் பின்புறத்தில் 13 மெகா பிக்ஸல் (எம்.பி) மற்றும் 2 எம்.பி என இரட்டை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டிஜிட்டல் ஃப்ளாஷ் வசதிகொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 3,330 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. இவற்றுடன், 4 ஜி வோல்ட், கூகுல் கேஸ்ட், சென்ஸார் ஆன் போர்ட் உள்ளிட்ட இதர வசதிகளும் உள்ளது. கறுப்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 156 கிராம் ஆகும்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?