Published : 25,Feb 2019 04:21 AM

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் டேங்கர் வாகனங்கள் ஏற்பாடு - சேலம் ஆட்சியர்

Tourists-are-not-allowed-to-yercaud-forest-says-district-collector

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பரவிவரும் காட்டு தீயை கட்டுப்படுத்த 100 தண்ணீர் டேங்கர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக காட்டுதீ பரவி வருகிறது. மலை பகுதி மட்டுமல்லாமல் அடிவாரத்தில் உள்ள கருங்காலி கிராமத்தை சுற்றி உள்ள வன பகுதிகள் எரிந்து நாசமானது. காற்றின் வேகம் காரணமாக மலை பகுதியில் தீயின் வேகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இந்த நிலையில் இரவு, ஏற்காடு மலை பகுதியில் காட்டுதீ பரவி வரும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி பார்வையிட்டார். தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்த அவர், இரவு முழுவதுதும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி, காட்டுத் தீயை கட்டுப்படுத்த தற்போது 30க்கும் மேற்பட்ட டேங்கர் வாகனங்கள் இடைவிடாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 100 தண்ணீர் டேங்கர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். காட்டுதீ காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் வனப் பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . நகர் பகுதியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைபாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் செயற்கை தீமூட்டியதாக  3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மது அருந்திவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்