ஒத்த கருத்து உடையவர்களும், தமிழக மக்கள் முன்னேற்றத்தில் நிஜமாகவே நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்களுடன் கூட்டணி அமைக்க முடியும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதேசமயம் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மக்கள் மய்யம் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஒத்த கருத்து உடையவர்களும் தமிழக முன்னேற்றத்தில் நிஜமாகவே நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதே தெரியும். அவருடன் நான் பணி புரிந்துள்ளேன்; அவரின் தொண்டர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நாள்
. மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் தேர்வு நடைபெறுகிறது. அரசியல் என்பது சமதளமாக இருக்க வேண்டும்; வேறு எந்த தொழிலிலும் வாரிசு வந்தால் தவறு கிடையாது. ஆனால் அரசியலில் அப்படி இல்லை.” என்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்