Published : 24,Feb 2019 05:04 AM

லஞ்சம் கேட்ட தாசில்தார், ஜீப்பில் எருமையை கட்டிய விவசாயி!

Tehsildar-asks-bribe--Farmer-Ties-Buffalo-to-his--Vehicle

பட்டா பெயர் மாற்றுவதற்காக, ஒரு லட்சம் ரூபாய் கேட்ட தாசில்தாரின் ஜீப்பில், எருமை மாட்டை விவசாயி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டம் காரக்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி, லஷ்மி யாதவ் (50). இவரது தந்தை பெயரில் உள்ள வீட்டின் பட்டாவை, தனது பெயருக்கு மாற்றக் கோரி, தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பல நாட்களாகியும் பதில் இல்லை. பிறகு தாசில்தார் சுனில் வர்மா, ‘’பெயர் மாற்ற வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.

ஏழை விவசாயியான யாதவ், இருந்த பொருட்களை விற்று ரூ.50 ஆயிரம் ரூபாயை தேற்றி அதை அவரிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டார் தாசில்தார். மீதி 50 ஆயிரம் ரூபாயைத் தந்தால்தான் பட்டாவை மாற்ற முடியும் என்றார். இதற்கு மேல் என்னிடம் பணம் இல்லை என்றார், யா தவ். இல்லை என்றால் பட்டாவை மாற்ற முடியாது என்றார் அவர். 

கடுப்பான யாதவ் தன்னிடம் இருந்த எருமை மாட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று பத்திக் கொண்டு வந்தார். அங்கிருந்த அவரின் ஜீப் பில் அதைக் கட்டி அதற்கு முன், புற்களை போட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு வந்த உயரதிகாரிகள், ‘இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம். இப்படி பண்ணக் கூடாது’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் யாதவ் புகார் செய்தததை அடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்