இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற களிப்பில் அடையாளம் தெரியாத பெண்ணை வாலிபர் ஒருவர் முத்தமிட்டு வைரலான புகைப்படத்தின் சாயலில் உருவாக்கப்பட்ட சிலையை சிலர் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற மகிழ்ச்சியில் அமெரிக்க கப்பற்படை மாலுமி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்த முகம்தெரியாத பெண்ணை முத்தமிட்டார். இதனை அல்ஃப்ரெட் ஐசென்ஸ்டாத்ட் என்னும் புகைப்படக்கலைஞர் புகைப்படம் எடுத்திருந்தார்.
இந்தப் புகைப்படம் 1945 ஆம் ஆண்டு லைஃப் என்ற வார இதழில் வெளிவந்து வைரலானது. இப்புகைப்படத்திலிருந்த கப்பற்படை மாலுமியான ஜார்ஜ் மெண்டோன்சா நேற்று உயிரிழந்தார். இதற்கிடையில் புகழ்பெற்ற இந்த முத்த ஜோடிகளுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தச் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். பெண்ணின் காலில் #METOO என சிவப்பு நிறத்தில் எழுதிவைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் விருப்பம் இல்லாமல் ஒரு ஆண் பெண்ணை முத்தமிட்டதால் இதனை மீடூ விவகாரத்தில் இணைத்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையில் எழுதப்பட்ட #METOO வார்த்தைகளை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!