[X] Close

மாணவிக்கு பாலி‌யல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது

abuseSchool-Teacher-arrested-for-sexual-harassment-at-Chennai

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கணினி ஆசிரியராக பணிபுரிபவர் அருண்குமார். இவர் அதே பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து அந்த 13 வயது மாணவி கணினி ஆசிரியர் அருண்குமார் என்பவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 


Advertisement

அந்த மாணவி கூறியதன் தகவல் படையில் அவர்களது பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்  தாம்பரம் காவல்துறையினர் சப்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அந்த பள்ளியின் ஆசிரியர் அருண்குமாரை மகளிர் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close