ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி மின் விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!