Published : 15,Apr 2017 12:16 PM

சீனாவைப்போல இந்தியா இல்லை: சானியா வருத்தம்

Sania-mirza-feels-about-tennis-future-in-India

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகள் உருவாகாதது ஏமாற்றம் அளிப்பதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு மற்றும் தனிச்சிறப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், டென்னிஸில் ஒற்றையர் பிரிவில் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் சிறந்த வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன். சீனா போன்ற நாடுகளில் ஒரு வீராங்கனை ஜொலிக்கத் தொடங்கினால் அவரைப் பின்பற்றி ஏராளமான வீராங்கனைகள் உருவாகி விடுவார்கள். எதிர்பாராதவிதமாக இங்கே அப்படி நடக்கவில்லை. அதற்கு சரியான பயிற்சியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்கள் உள்ளன. 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 20 ஆண்டுகளுக்கு ஒரு சானியா மிர்சா என்பது போதுமானதல்ல என கவலை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்