ஆவின் பால் நிறுவனம் உபயொகபடுத்திய பால் பாக்கெட்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்ச நெகிழி பால் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
எனினும் இந்த தடையில் இருந்து பால் மற்றும் எண்ணைப் பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. ஆனாலும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் தன் நிறுவனத்தில் நெகிழி பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே, ஆவின் தன் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாஸ்கள் மற்றும் பீங்கான் கப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பங்காக தான் ஆவின் உபயொகபடுத்த பட்ட பால் பாக்கெட்டுகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவினின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் கூறுகையில் “ ஏற்கெனவே பால் நிலையத்தில் இருக்கும் நெகிழி ஃபில்ம்கள் ஏலத்தில் விற்கபடுவது போல, பால் பாக்கெட்டுகளும் இந்த சேவையின் மூலம் திரும்ப பெறலாம்” என திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்