[X] Close

“விதிமுறைகளுக்கு மாறாக பந்துவீசுகிறார் ராயுடு” - ஐசிசி புகார்

Ambati-Rayudu-s-bowling-action-is-under-suspect--ICC

ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக அம்பத்தி ராயுடு பந்துவீசியதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 288 ரன் எடுக்க, பின்னர் விளையாடிய இந்திய அணி 254 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


Advertisement

இந்த போட்டியில் அம்பாத்தி ராயுடு இரண்டு ஓவர்கள் பந்துவீசி 13 ரன் வழங்கியிருந்தார். போட்டி முடிந்த பின்னர் நடுவர்கள் அளித்த அறிக்கையில் நாயுடுவின் பந்துவீச்சு குறித்து புகார் எழுப்பியுள்ளனர். இதனால் அம்பாத்தி ராயுடு 14 நாட்களுக்குள் பந்துவீச்சு சோதனை மேற்கொள்ளவேண்டும். எனினும், அவர் நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ந்து பந்துவீசலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் அரிதான பகுதிநேர பந்துவீச்சாளராக ராயுடு பயன்படுத்தப்பட்டு வருகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 121 பந்துகள் வீசியுள்ள ராயுடு, 3 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close