[X] Close

பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயர் மாற்ற வேண்டாம்: மோடி அறிவிப்பு

modi-says-women-not-to-change-names-post-marriage

திருமணத்துக்கு பிறகு, பாஸ்போர்ட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

மும்பையில், இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பெண்கள், தங்களது தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தி வந்தனர். திருமணத்துக்கு பிறகு, அதில் அவர்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. இனி, திருமணத்துக்கு பிறகும், அதே பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. எல்லா வளர்ச்சி திட்டங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதன்படி, பெண்களுக்கு பேறு கால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது’ என்றார்.


Advertisement
Related Tags : modi passport womenmarriage modi passport women

Advertisement

Advertisement
[X] Close