விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை பேட்ட திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.
இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சாய்பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.35லட்சத்தை காசோலையாக தருவதாகவும், மீதித்தொகையை 4 வாரத்துக்குள் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?