இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூரில் விதிகளை மீறியதாக கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மீது இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் அவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த 31ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூரில் விதிகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், விதிகளை மீறியதாக இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் திருவாரூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்