Published : 30,Dec 2018 07:13 AM

பிரசவத்துக்கு முன் மருத்துவருடன் நடனமாடிய பெண் ! வைரலாகும் வீடியோ

This-video-of-pregnant-woman-dancing-with-her-doctor-before-delivery-has-Twitterati-delighted

பிரசவத்துக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது டாக்டருடன் சேர்ந்து 'ஸ்விங்' ஹிந்தி பாடலுக்கு ஆடிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

Girls Like To Swing என்ற ஹிந்தி பாடலில் பிரியங்கா சோப்ராவும், அனுஷ்கா சர்மாவும் சுழன்று சுழன்று ஆடுவார்கள். அந்த பாடல் தற்போது வைரலாகி இருக்கிறது. ஆனால் இந்த வைரலுக்கு காரணம் அனுஷ்கா சர்மா அல்ல. சங்கீதா சர்மா என்ற பெண். தனது இரண்டாவது பிரசவத்தின் சில நிமிடங்களுக்கு முன்பு தனது டாக்டருடன் சேர்ந்து மருத்துவமனை அறையிலேயே 'ஸ்விங்' ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 

மருத்துவமனையில் பிரத்யேக உடையை அணிந்துக்கொண்டு அழகான நடன அசைவுகளுடன் சங்கீதா சர்மாவும், மருத்துவரும் ஆடிய வீடியோ தற்போது வைரல். தன் பிரசவத்துக்கு முன் மனநிலையை சீராக்கிக்கொள்ள இந்த பெண் நடனம் ஆடியுள்ளார் என்று பலராலும் அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அந்த வீடியோ குறித்து சங்கீதா சர்மாவே விளக்கம் அளித்துள்ளார். இது என்னுடைய இரண்டாவது வீடியோ. நடனம் என்பது புத்துணர்ச்சி தரக்கூடியது. கர்ப்பிணி பெண்களுக்கு நடனம் ஆடுவது நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் முறையான வழிகாட்டுதலின் படி அதை நான் செய்ய வேண்டும். என்னை யாரும் குருட்டுத்தனமாக பின்பற்றாதீர்கள். நான் ஒரு நடனக்கலைஞர். அதனால் எனக்கு இது சாத்தியமாகவும், எளிதாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்