யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் பாஜக விமர்சிப்பதில்லை எனவும் தனது தாய், தந்தையை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் விமர்சிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி பேசுகையில், பிரதமர் மோடி, அமைச்சர் உமா பாரதி, பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்துமதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது எனவும், அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எனவும் சர்ச்சையாகப் பேசி இருந்தார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர், பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதாறாப் பேசினார்.
அந்த வரிசையில் மும்பையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசுகையில், “நீங்கள் பிரதமராக வருவதற்கு முன் உங்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. இப்போதுகூட உங்களின் தந்தையின் பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையின் பெயர் ராஜீவ் காந்தி என்று அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி எனவும் ராகுல் காந்தியின், கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு என அனைவருக்கும் தெரியும். ஆனால் மோடியின் தந்தையை இன்றுவரை யாருக்கும் தெரியாது” என பேசினார்.
இந்நிலையில், யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் பாஜக விமர்சிப்பதில்லை எனவும், ஒருவர் வகிக்கும் பதவிக்கான செயல்பாடுகள் குறித்தே விமர்சிக்கிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் எனது தாய், தந்தை பற்றி தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சி விமர்சிப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai