[X] Close

கார், ஆம்புலன்ஸ் மோதி விபத்து - பரிதாபமாக உயிரிழந்த நோயாளி

A-Patient-die-for-Ambulance-Accident-in-Sri-Perambudur

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி உயிரிழந்தார்.  


Advertisement

வேலூர் மாவட்டம் சாத்துவாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சின்னச்சாமியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால், அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். 


Advertisement

ஆம்புலன்ஸ் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் சென்றபோது, அவ்வழியாக சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸும், காரும் சாலையிலேயே கவிழ்ந்தது. ஆபுலன்ஸில் இருந்த சின்னச்சாமி உடல்நிலை மீண்டும் மோசமானது. அவர் உடனே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் இருந்த 4 பேர் மற்றும் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுனர் உட்பட 5 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close