[X] Close

12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chance-for-Heavy-Rain-in-12-districts

உள்மாவட்டங்களில் காற்றுழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று நாள் முழுக்க மழை பெய்தது. இருப்பினும் கனமழை என்பது இல்லை. விடிய விடிய பெய்த மழை இன்றும் விட்டு விட்டு பெய்து வருகிறது.


Advertisement

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையில்லை.

உள்மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதாவது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, கருர், சேலம், நாமக்கல், தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்டசமாக சோழவரம், மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் பருவமழை குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close