நடிகை ஃபிரீடா பின்டோ தனது காதலரை அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
’ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. இந்தப் படத்தை அடுத்து ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது ’மோக்லி: லெஜண்ட் ஆப் த ஜங்கிள்’, ’நீடில் இன் எ டைம்ஸ்டேக்’ ஆகிய படங்களில் நடித் து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கிறார்.
இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிரிந்தார் ஃபீரிடா. இதையடுத்து ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த தேவ் படேலை அவர் காதலித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, அவர் சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருகிறார்.
இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை பார்க்கச் சென்ற இவர்க ள், ஸ்டேடியத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் பரபரப்பானது.
ஃபிரீடாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின் நண்பர்தான், கோரி டிரான். அவர்தான் கோரியை, ஃபிரீடாவுக்கு அறிமுகப் படுத்தியுள் ளார். முதலில் நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இந்நிலையில் 33 வயதான ஃபிரீடாவும் கோரி டிரானும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி ஹாலிவுட் தரப்பில் கூறும்போது, ‘தங்களது காதலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்துள்ளனர். அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்கும். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்’ என்றனர். இந்த காதல் திருமணம் குறித்து ஃபிரீடா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை