Published : 11,Nov 2018 02:24 AM

பட்டனை மாற்றி அழுத்திய விமானி : கந்தஹார் விமானத்தால் டெல்லியில் பீதி!

Hijack-scare-at-Delhi-airport-as-pilot-presses-wrong-button

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹாருக்கு செல்ல இருந்த விமானத்தில், விமானி தவறுதலாக பட்டனை மாற்றி அழுத்தியதால் டெல்லி விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கந்தஹாருக்கு ஏரியானா ஆப்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் வழக்கம் போல எப்ஜி 312 (FG312) என்ற எண் கொண்ட இந்த விமானம் கந்தஹாருக்கு புறப்பட தயாராக இருந்தது.

அதில், 124 பயணிகளும், 9 விமானப் பணியாளர்களும் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக சென்று கொண்டிருந்தபோது, விமான கடத்தலின்போது பயன்படுத்தப்படும் எச்சரிக்கை பட்டனை விமானி தவறுதலாக அழுத்தி விட்டார்.


இதனால், விமானம் கடத்தப்படப்போவதாக பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் விமானத்தை சூழ்ந்தனர். விமானம், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் சோதனை நீடித்தது. விமானிதான் தவறுதலாக பட்டனை அழுத்தினார் என்பது தெரிய வந்ததை அடுத்து, விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்