[X] Close

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை!

EPS--OPS-meeting-with-ADMK-constituency-authorities

20 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந் து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. 


Advertisement

இந்தத் தேர்தலை கவனிப்பதற்காக, 20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. 


Advertisement

இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


 


Advertisement

Advertisement
[X] Close