லண்டனில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரோபோ மூலம் மருத்துவர் ஒருவர், தனி வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்த சிகிச்சைக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.
அனைத்து விஷயங்களையும் இந்த ரோபோ ஆட்டிச குழந்தைகளுக்கு எளிமையாகப் புரிய வைக்கிறது. காஸ்பர் உதவியுடன் குழந்தைகள் பல விஷயங்களைத் துல்லியமாக யூகித்து விடுகின்றனர். குழந்தையின் நிலையை முன்கூட்டியே அறிந்து அவர்களது தேவையையும் பாதுகாப்பையும் காஸ்பர் ரோபோ கற்றுத் தருகிறது.
சாப்பிட முரண்டு பிடிக்கும் குழந்தைகளை உண்ண வைக்கிறது. வகுப்பறையில் குழந்தைகளுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே, உணவு உண்ணச் செய்கிறது. காஸ்பர் ரோபோவிடம் பழகும் குழந்தைகளின் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறு குழந்தை போல் உருவம் கொண்ட இந்த ரோபோ, பாட்டு, நடனம், விளையாட்டு, எப்படி சாப்பிடுவது என்பன போன்ற பல செயல்களைச் செய்து காட்டுகிறது. இதை அப்படியே ஆட்டிசம் குழந்தைகளும் பின்தொடர்ந்து செய்கிறார்கள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை அறிமுகம் இல்லாதவர்கள் சந்திக்கும்போது எப்படி பாதுகாப்பாக நடந்துகொள்வது போன்ற சமூக அக்கறையுடன் கூடிய பயிற்சியை வழங்கும் வகையில் காஸ்பர் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான தனிப்பட்ட விஷயங்களை புரிய வைப்பதையும் இந்த ரோபோ கற்றுக்கொடுக்கிறது.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ, ஓர் ஆசிரியர் மற்றும் ஒரு மருத்துவரின் அறிவையும், ஆற்றல் நுணுக்கங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காஸ்பர் ரோபோவுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!