Published : 14,Oct 2018 03:44 AM

கொலை வெறிப் பேச்சு: நடிகருக்கு எதிராக வழக்குப் பதிவு!

Sabarimala-protest--FIR-against-actor-Kollam-Thulasi

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவோம் என்று பேசிய மலையாள நடிகர், 'கொல்லம் துளசி' மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தர விட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். தீர்ப்பைக் கண்டித் து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கேரளாவில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அதில் கலந்துகொண்ட கேரள நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, ‘சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கும் மற்றொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதையடுத்து அவர் மன்னிப்புக் கேட்டார். ‘தீராத பக்தியின் காரணமாக அப்படி பேசிவிட்டேன். அதை வாபஸ் வாங்கிக்கொள் கிறேன். என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கொல்லம் துளசி இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்