ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் மாஞ்சோலை தெருவில் உள்ள மின்பகிர்மான பெட்டி அருகே பேட்டரி, வயர்களுடன் சந்தேகத்திற்கிடமான பொருள் கிடந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அடுத்த கலைமகள் நகர் மாஞ்சோலை 1 வது பிரதான சாலையில் இருந்த மின்பகிர்மான பெட்டியில் சந்தேகப்படும் வகையிலான பொருள் ஒன்று இருப்பதை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், கிண்டி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிண்டி காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த பொருளை சோதனையிட்டனர். பின்னர் அதனை பிரித்து பார்த்ததில் சில சிப், 2 பேட்டரி, சிகப்பு நிறத்தில் எல்.இ.சி லைட், சோலார் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதனிடையே அச்சமடைந்த பொதுமக்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
Read Also -> பெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு
(File Photo)
இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மர்ம நபர் (இளைஞர்) ஒருவர் 4 மணியளவில் முதுகில் பையை மாட்டிக் கொண்டு சம்பவ இடத்தில் வந்து மின்பகிர்மான பெட்டியில் டிவைஸ் ஐ பொருத்திவிட்டு சென்றுள்ளார்.முன்னதாக அங்குள்ள முதியவர் ஒருவரிடம் மசூதிக்கு செல்ல வழி கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் சிறிது நேரம் அங்கேயே நின்று பையில் இருந்த டிவைஸை மின்பகிர்மான பெட்டியில் ஒட்டவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிசென்று விட்டார்.இதனை அங்கிருந்த சிலர் பார்த்துள்ளனர். அந்த இளைஞர் பதற்றத்துடன் சென்றதால் சந்தேகம் அடைந்த பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
Read Also -> சென்னையில் தெரு நாயை அடித்துக் கொன்ற மூவர் கைது
இந்நிலையில் அந்த சாதனைத்தை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்று கூறினர். பின் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம பொருள் டிவைஸ் வைத்துச் சென்றது யார் எனபது குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai