Published : 11,Aug 2018 11:14 AM

இம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை

Sunil-Gavaskar-declines-invitation-for-Imran-Oath-taking-ceremony

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்  கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து  இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், இம்ரான் கானுக்கு ஏற்கெனவே வாழ்த்துகள் தெரிவித்துவிட்டதாகதாவும் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியை காரணம் காட்டி தன்னால் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஒரு கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பலமுறை இந்தியாவிற்கு வந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் இந்தியர்களுடன் நல்ல முறையில் உரையாடி உள்ளார். அவருக்கு இந்தியாவை பற்றி தெரியும். இந்தியா- பாகிஸ்தான் உடனனான உறவுகளை பொறுத்தவரையில் இம்ரான் கான் மீது எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க உள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்