காவேரி மருத்துவமனை சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரது முக்கிய உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நிலவுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதேபோல், காவேரி மருத்துவமனை பகுதியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இல்லம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளநிலையில், தமிழகம் முழுவதும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!