உலக அளவில் இந்தியர்கள் வேலை பளு மற்றும் கடன் சுமை பிரச்னைகளால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. அந்த ஆய்வின்படி பிரேசில், இந்தோனிஷியா உள்ளிட்ட வளரும் நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களைக் காட்டிலும் இந்தியர்கள் அதிகம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சிக்னா என்ற சுகாதார சேவை அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 89 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவிலான சராசரி 86 சதவீதத்தை காட்டிலும் அதிகம் ஆகும். ‘Well-Being Survey’ எனப்படும் இந்த ஆய்வில் உடல்நிலை, குடும்பம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பணிச் சூழல் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டன.
சிக்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை 23 நாடுகளைச் சேர்ந்த 14,467 பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 20 நகரங்களைச் சேர்ந்த 1000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வைப் பொறுத்தவரை மற்றவர்களைக் காட்டிலும் 18 முதல் 34 வயது உடையவர்களே அதிக மன அழுத்தம் அடைகின்றனர்.
ஆய்வில் பங்கெடுத்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றும் தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் போதிய நேரம் ஒதுக்கிட முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். குடும்பங்களை பொறுத்தவரை தங்களது பெற்றோர்களுக்கோ, குழந்தைகளுக்கோ போதிய பணம் செலவிட முடியாமல் திணறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்