[X] Close

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை

Election-Commission-order-on-two-leaves-symbol-on-Today

இரட்டை இலைச்சின்னம் பற்றி முடிவெடுக்க சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று நேரில் விளக்கம் அளிக்க உள்ளனர்.


Advertisement

காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக இருதரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.

இந்த சூழலில், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பினர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே இரட்டை இலைச் சின்னத்‌திற்கு உரிமை கோரி, ஓ.பன்னீர்செல்வம்‌ தரப்பு மனு அளித்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், சசிகலா தரப்பில் பரணிகுமார், செந்தில் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவினர் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர்.


Advertisement

அதில், அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் மொத்தமுள்ள 2,147 உறுப்பினர்‌களில் 1,912 பேர் சசிகலாவுக்கு‌ ஆதரவாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள 37 எம்.பி.க்களும், 122 எம்.எல்.ஏ‌க்களும் சசிகலாவுக்கு ஆதரவாக ‌இருப்பதால் ஆர்.கே‌நகரில் இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா தரப்புக்கே ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருதரப்பும் நேரில் விளக்கம் அளித்த பிறகு சின்னம் பற்றி தேர்தலை ஆணையம் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close