Published : 29,Jun 2018 10:27 AM

‘டக்-அவுட்’ ஆனதில் கோலிக்கும், தோனிக்கும் இப்படியொரு ஒற்றுமை..!

MS-Dhoni-scored-0--2--in-India-s-1st-T20I-in-2006-Virat-Kohli-scored-0--2--in-India-s-100th-T20I

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

முதல், டி20 போட்டி டப்ளினில் நடந்தது. இதில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி விளையாடிய இந்த 100வது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். நூறாவது போட்டியில் விராட் கோலி அடித்த ரன்களை தான் முதல் டி20 போட்டியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்திருந்தார்.

வீரேந்திர சேவாக் தலைமையிலான இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா உடன் மோதியது. ஜோகன்னஸ்பர்க் நகரில் 2006ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி இரண்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். 

                        

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்நாள், முன்னாள் கேப்டன்களுக்கு இடையே 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு ஒற்றுமை. டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் என்னும் மைல்கல்லை எட்ட விராட் கோலிக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை. இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் கோலி அதனை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்