[X] Close

விளம்பர தூதரானார்  'டான்சிங் அங்கிள்'

Madhya-Pradesh-Professor-Internet-s-Dancing-Uncle-Has-A-New-Role

மத்தியப்பிரதேசத்தில் டான்சிங் அங்கிள் என நெட்டிசன்களால் அழைக்கப்படும் பேராசிரியர் சஞ்சீவை, அங்குள்ள நகராட்சி ஒன்று ‌ விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, இந்தி நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்த திருமணத்துக்கு சென்றாலும் கோவிந்தாவின் திரைப்பட பாடல் ஒன்றுக்கு மேடையில் நடனம் ஆடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நடிகர் கோவிந்தா நடித்த திரைப்படம் ஒன்றின் பாடலுக்கு இவர் ஆடிய நடனம், சமூக வலைதளங்களில் வைரலானது. இவரது நடனத்தை பெரிதும் ரசித்த நெட்டிசன்கள் டான்சிங் அங்கிள் என்று சஞ்சீவுக்கு பட்டப்பெயர் சூட்டினர். இந்நிலையில் விதிஷா நகராட்சியின் விளம்பர தூதராக பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு உள்ளார். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close