[X] Close

ஸ்டெர்லைட்: திமுக மீது தமிழிசை புகார்

Tamilisai-says-DMK-is-the-reason-for-sterlite-agitation

ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகளுக்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

கோவை விமான நிலையத்தில‌ செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு அதிகரிப்புக்கும் போராட்டத்துக்கும் திமுகதான் காரணம் என முதலமைச்சர் பழனிசாமி கூறியது உண்மைதான் என்றார். தூத்துக்குடி கலவரம் குறித்து பேச ரஜினி உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறிய தமிழிசை, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் மக்களை கொச்சைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்மறை கருத்துகளுக்கு மோசமான விமர்சனம் செய்வது தவறு என்றும் தமிழிசை கூறினார். மாதிரி சட்டமன்றக் கூட்டம் மூலம் சட்டமன்ற வர‌லாற்றில் மோசமான முன்னுதாரணத்தை ஸ்டாலின் படைத்து வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
 


Advertisement

Advertisement
[X] Close