Published : 30,May 2018 06:17 AM

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் ரஜினி

Actor-Rajinikanth-met-sterlite-protesters

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற அவர் அதன்பின் காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார். மக்களும் தங்கள் குறைகளை ரஜினியிடம் கூறினர்.  அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதல் முறையாக மக்கள் பிரச்னைக்காக நடிகர் ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்