Published : 25,May 2018 09:01 AM

கலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்

People-not-attending-marriage-functions-due-to-144-order

தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால், கலகலப்பாக இருந்திருக்க வேண்டிய திருமண மண்டபம், வெறிச்சோடி காணப்பட்டது.

தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த லின்பி பிரிசில்லாவுக்கும், நெல்லை வள்ளியூரைச் சேர்ந்த நிஷாந்துக்கும் இன்று திருமண‌ம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி ரயில்நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்த நிலையில், அங்கு பெரும்பாலான உறவினர்கள் வராததால் கல்யாண மண்டபமே களையிழந்து காணப்பட்டது.

போக்குவரத்து சேவை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உறவினர்கள் மண்டபத்திற்கு வர இயலவில்லை என திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உறவினர்களுக்காக செய்துவைத்த சமையலும் வீணாவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனிடையே தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பின் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்