Published : 17,May 2018 05:55 AM

அதிமுக சீனியர் சாம்பியன் :அமைச்சர் ஜெயக்குமார் 

TN-Minister-Jayakumar-says-ADMK-is-a-Senior-champion

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர். இந்த சூழலில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்றிரவு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் ,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் "கர்நாடகாவில் நடப்பது போல தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை தமிழகத்தில் அதிமுக சீனீயர் சாம்பியன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகத்தில் நடக்கும் நிலை நாளை தமிழகத்தில் நடக்க வாய்பிருக்கிறதா எனக் செய்தியாளகள் கேட்டதற்கு “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ”  எனக் பதிலளித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்