Published : 19,Apr 2018 03:07 PM

தாய்மையை கொச்சைப்படுத்துவதை திமுக கண்டிக்க வேண்டும்- தமிழிசை

tamilisai-Condemned-the-dmk-R-S--bharathi-letter

ஹெச்.ராஜாவை விமர்சிக்கும் வகையில் கடிதம் எழுதி இருந்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதியை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தப்பில் இருந்து கண்டன குரல்கள் வந்தன. திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய பக்கத்தில் ‘ தமிழ கஅரசியல் நாகரீகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்கவேண்டும். திமுக ஆர்.எஸ். பாரதியின் கடிதம் தாய்மையைக் கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திமுக இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்