Published : 14,Apr 2018 11:32 AM

அன்பு பாசத்தின் அடையாளமான தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து - இம்ரான் தாஹிர் 

Imran-tahir-tamil-new-year-wishes

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வருகிறார். இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘ என் இனிய தமிழ் மக்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், அன்பு பாசம் என்பதற்கு அடையாளமாக விளங்கும் என் உடன் பிறப்புகளே, இன்று போல் என்றும் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு’ என பதிவிட்டுள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்