[X] Close

காவிரியில் கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்ய மே வரை அவகாசம்

CPCB-to-continue-joint-monitoring-of-Cauvery-river-till-May-end

கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மே மாத இறுதி வரை ஆய்வு மேற்கொண்டு ஜூலைக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

காவிரியில் கழிவு நீர் கலப்பதாக உச்சநீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர், நவம்பர் உள்ளிட்ட மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது செய்யப்பட்ட ஆய்வில் உண்மை நிலையை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்றும் வறட்சி காலமான மே மாதத்தில் ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், மே மாத இறுதி வரை ஆய்வு மேற்கொண்டு ஜூலை மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close