பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீரின் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.
டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமத் படேல், குலாம்நபி ஆசாத், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏற்றி நள்ளிரவு பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, அநீதி இழைக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix