மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் நிபந்தனையின்படி இன்று மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி இறுதி நாள் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “உச்சநீதிமன்றம் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காதது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.வாரியம் தொடர்பான தீர்ப்பில் ஸ்கீம் அல்லது மேலாண்மை வாரியம் என எந்த உத்தரவாக இருந்தாலும் அதை ஏன் மத்திய அரசு செயல்படுத்தவில்லை? கர்நாடகாவில் தேர்தல் முடியாமல் எந்த வாரியமும் அமையாது” என்றார்.
மேலும் பேசுகையில், அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள குளறுபிடிகளால் மதுரையில் பிரச்னை வந்துள்ளது. அதிமுக கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை ஆட்சியும் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது.காவரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தால் தான் முடிவு பிறக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் ஒரு நபர் விசாரணை கமிஷனில் விசாரிக்கப்பட வேண்டிய அப்போதைய முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், மற்றும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பார்த்த வெங்கையாநாயுடு உள்ளிட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் அவர்களை விசாரிக்கும் அதிகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையத்திற்கு இல்லை. எனவேதான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம் என பேசினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!