கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரில் சதாம் ஹூசைன் மற்றும் சுபைர் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகை சென்னையில் உள்ள தேசிய புலானய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கொலை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
கோவையைச் சேர்ந்த சசிகுமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு துடியலூர் காவல்துறையினரிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் வழக்கை தேசியப் புலானாய்வு முகமையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி அபுதாஹிர் மற்றும் முபாரக்கை தேசியப் புலனாய்வு முகமை தேடி வருகிறது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு