[X] Close

தேனாண்டாளை விட்டு கைமாறிய தனுஷ் படம் 

Karthik-Subbaraj-confirms-Dhanush-project

தனுஷ் படத்தை தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டுள்ளது.


Advertisement

கடந்த ஆண்டே தனுஷ் படத்தை இயக்குவதற்கு கமீட் ஆகியிருந்தது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் இயக்க இருந்தார். ’இறைவி’ படத்தை முடித்தக் கையோடு தனுஷின் படத்தின் வேலைகள் தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டன. ஆனால் தனுஷ் ஹாலிவுட் படம், வெற்றிமாறன் படம், ‘மாரி2’ என பிசியாக இருந்தார். ஆகவே சுப்ராஜ் படத்தின் வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில் படம் தாமதமானதற்கு தனுஷ் காரணமில்லை, தயாரிப்பு தரப்புதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பண நெருக்கடிகளில் மாட்டிக் கொண்டுள்ள தேனாண்டாள் ஃபிலிம்ஸ் இந்த புராஜெட்டில் இருந்து விலகிக் கொண்டுள்ளது. எனவே இந்தப் படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க லண்டனில் தயாராக உள்ள இத்திரைப்படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது. இதனை அடுத்து தனுஷ் இயக்க உள்ள திரைப்படத்தை மட்டும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close