Published : 27,Mar 2018 02:33 AM

ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாரையும் விசாரிப்போம்: விசாரணை ஆணையம்

Jayalalitha-Death-Issue--Whoever-inquires-the-Commission

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தரப்பு மட்டுமின்றி யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பினர் மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது. அதில் யாரையெல்லாம் விசாரிக்க வேண்டும் என ஆணைய தலைவர் ஆறுமுகசாமி முடிவு செய்வார் எனவும், ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர் வீரபெருமாளுக்கு நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த பாலாஜி, விமலா உள்ளிட்ட 7 அரசு மருத்துவர்களிடமும் நாளை மறுநாள் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையை சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நடத்த உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்