Published : 24,Mar 2018 04:35 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனிலும் போராட்டம்

Protest-against-Sterlite-in-London-also

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனிலும் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையை மூடக்கோரியும், இதன் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தூத்துக்குடியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள், பெண்கள் என 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதால் தூத்துக்குடி ஸ்தம்பித்துள்ளது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்