[X] Close

‘அண்ணா’ பெயரை உச்சரித்தார் கருணாநிதி

Duraimurugan-said-dmk-leader-Karunanidhi-spoke-some-words

பல மாதங்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, சில வார்த்தைகளை உச்சரித்ததாக, எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார். 


Advertisement

கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் தனது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சமீபமாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்து விட்டு அவருக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைவார் என்று துரைமுருகன் கூறியுள்ளார். மேலும், ‘கருணாநிதியிடம் உங்கள் பெயர் என்ன என்று மருத்துவர் கேட்டதற்கு கருணாநிதி என கூறினார்’ என்று தெரிவித்தார். அதேபோல் உங்களுக்கு  பிடித்தத் தலைவர் யார் என்று மருத்துவர் கேட்க, ‘அண்ணா’ என்று கருணாநிதி கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close